தீரனின் வாரிசுகளே அணி திரண்டு வாருங்கள்
நமது மண்ணை மீட்டு எடுக்க நமது மக்களின் நலன் காக்க அணி திரண்டு நிற்போம் . புறகணிக்க பட்ட கொங்கு மண்டலத்தை செப்பனிட ஒன்று திரள்வோம் வாருங்கள் .கொங்குநாடு பேரவை ஆரம்பித்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆயிற்று ஆனால் கட்சியின் வளர்ச்சியோ பன்மடங்காக பெருகிற்று .
பிற கட்சியினர் நமது கட்சியின் வளர்ச்சிகண்டு யார் இவர்கள் எப்படி இவர்களால் இவ்வளவு மக்களை திரட்ட முடிகிறது என்று கேட்கிறார்கள் .யார் இவர்கள் ? என்ற கேள்விக்கு பதில் இந்த மண்ணின் மைந்தர்கள் கொங்கின் மைந்தர்கள் ,என்று தான் கூறவேண்டும் .கொங்கு மண்டலத்தில் விடுதலைக்கு வித்திட்ட வீரன் தீரனின் வாரிசுகள் நாம் .சிதறுண்டு கிடந்த நமது சக்தி இப்பொழுது ஒன்றிணைந்து நிற்கின்றது .நமது எழுச்சி கொங்குமண்டல்தில் பிற கட்சிகளுக்கு வீழ்ச்சி .நமது கட்சி மூன்று மாத குழந்தை இந்த குழந்தையை கண்டு பிற கட்சியினர் அலட்சியம் செய்தார்கள் பத்தோடு பதினொன்று என்றார்கள் .ஆனால் நாம் நிரூபிப்போம் கொங்கு மண்டலத்தில் நாம் எப்போதும் ஒன்று தான் நம்பர் ஒன்றுதான் என்று .நமது கட்சியினரின் துள்ளலான பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கைகள் பிற கட்சியினரை தூக்கமிலக்க செய்திருக்கிறது .நமது கட்சியின் தேர்தல் வாக்குறிதிகளை இப்பொழுது அவர்களும் கூறி வருகிறார்கள் .இந்தனை நாள் ஏமாந்தது போதும்
இனி மேலும் ஏமாறது இருப்போம் . நமது உழைப்பு இந்தனை வருடங்களாக கடலில் கரைத்த பெரும்காயமாக போனது .இனியும் அது போல போக வேண்டுமா இல்லை நமது உழைப்புக்கு ஏற்ற உயர்வு வேண்டுமா .கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறினார்கள் இப்பொழுது தமிழகத்தை ஆள்பவர்கள் ,அதற்க்கு துணை நின்றவர்கள் ,ஆனால் இன்றோ நமது எழுச்சி கண்டு பரிசீலிப்போம் என்கிறார்கள் .ஏன் இந்த மாற்றம் அவர்களுக்கு எல்லாம் நமது ஒற்றுமை கண்டுதான் ,நமது எழுச்சியை கண்டுதான் ,நமது சக்தியை கண்டுதான் என்று சொன்னால் மிகை ஆகாது .
நமக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் ஆனால் ஒருவன் நமது உழைப்பை சுரண்ட நினைக்கும் பொழுது ஒன்றாய் இன்னைந்து அதை எதிர்கொள்வோம்.
பண பலம இருந்தால் வெற்றி நிச்சியம் என்று நினைக்கும் பிற கட்சினரை நாம் நம் உணர்வு பலத்தால் நமது கொங்குநாடு பேரவையை வெற்றி பெற செய்து உலகுக்கு வெளிகாட்டுவோம் கொங்கு இனத்தின் பலத்தை .நமது ஒவ்வொரு வரின் ஓட்டும் மதிப்பு மிக்கது அதை இத்தனை வருடங்களாக வீணாகி விட்டோம் இனியும் வேண்டாம் இந்த நிலைமை .நமது கட்சியின் வெற்றி நமது இனத்தின் வெற்றி ,நாம் முன்னேற நமது இனம் முன்னேற வாகளியுங்கள் கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கு .
விவசாயம் செழிக்க ,நமது விவசாய்கள் செழிக்க ஆதரிப்போம் கொங்குநாடு முன்னேற்ற பேரவையை .
" தீரனின் வாரிசுகளே அணிதிரண்டு நிற்போம்
கொங்கு இனத்தின் பெருமை நமது வெற்றியின்
மூலம் எட்டு திக்கும் பரவட்டும் விண்ணைத்தாண்டி பார்கட்டும்"
0 comments:
Post a Comment