கொங்கு பேரவை இணையத்தளம்

Saturday

கோவையில் கொங்குநாடு பேரவையின் பிரம்மாண்ட பொதுகூட்டம்

கோயமுத்தூரில் நடந்த பிரம்மாண்டமான பொதுகூட்டத்தில் பல்லாயிரகணக்கான தொண்டர்கள் கொங்கு மண்டலத்திலிருந்து வ.வு .சிதம்பரனார் மைதானத்திற்கு வந்து குவிந்தனர் .கலைநிகழ்ச்சிகளுக்கு பின் கூட்டம் தொடங்கியது .மாநாட்டில் கொங்குநாடு பேரவையின் மாநில தலைவர் பெஸ்ட் அய்யா உட்பட அனைத்து வேட்பாளர்களும் மற்றும் பேரவை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .முன்னதாக இலங்கையில் நடைபெற்று வரும் இன படுகொலை நிறுத்தி அமைதி திரும்ப மௌன அஞ்சலி செலுத்தி புறாக்களை பறக்கவிட்டனர் .

பல்வேறு கட்சிகளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் கொங்குநாடு பேரவையில் இணைத்தார்கள் .நம்மால் முடியும் நம்மால் மட்டுமே முடியும் என்ற கோஷம் சிதம்பரனார் மைதானம் எங்கும் ஒலித்தது .
கொங்குநாடு பேரவையின் மாநில பொது செயலாளரும் கோவை வேட்பாளருமான ஈஸ்வரன் பேசியதாவது .அதிக வருவாயை ஈட்டி தரும் கொங்குமண்டலம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது .இந்த நிலை மாற அதற்கு நமது கொங்குநாடு பேரவைக்கு வாக்களியுங்கள் .இது ஒரு பிரசார கூட்டம் என்று நினைக்காமல் வெற்றி விழா கூட்டமாக நினையுங்கள் என்று கூறினார் .
நமது பன்னிரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் ஐம்பது வேட்பாளர்கள் களம் இறக்க படுவர் .நம் ஆட்சி அமைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கூறினார் .இன்று வரை கோவை பாரளுமன்ற உறுபினராக உள்ள சுப்ராயன் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களையும் செய்யவில்லை .கோவை ,நீலகிரி மாவட்டத்தில் ஈளுவ ,படுகர் போன்ற இனத்தவர்கள் நமக்கு ஆதரவுகரம் தெரிவித்துள்ளனர்.அவர்களுடைய ஜாதியை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க பாடுபடுவோம் .பல கட்சிகளில் இருந்த பிற ஜாதி மக்களும் கோவை வளர்ச்சிக்கு நம்மை ஆதரிக்கின்றனர் .அதேபோல் மின் தடை ,வேலை இழப்பு போன்ற பிரச்னைகளுக்கு புதிய தீர்வு காணுவோம் .விவசாய பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்க செய்வோம் ,கொங்கு மண்டலத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம் .

பெஸ்ட் ராமசாமி அய்யா பேசுகையில் கொங்கு மண்டலத்தை தொடர்ந்து புறகனிக்கபட்டால் கொங்கு மாநிலத்தை புதிதாக உருவாக்குவோம் என்று கூறினார் .கொங்குமண்டலத்தில் உள்ள பத்து மாவட்டகளிலும் நூற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்கின்றனர் .தமிழகத்தின் மொத வருவாயில் நாற்பது சதவிகிதம் மேல் கொங்கு மண்டலம் மட்டுமே ஈட்டி தருகிறது .ஆனாலும் எந்த ஒரு வளர்ச்சியும் கொங்குமண்டலத்தில் மேற்கொள்ள படவில்லை.

இந்த நிலை மாற கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கே சிலிண்டர் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார் .

இதனிடைய கொங்குநாடு பேரவைக்கு கிராமங்களில் பெரும் அதரவு அலை திரண்டு வருகிறது .வேட்பாளர்களின் அசத்தலான பிரச்சாரம் எந்தஎந்த விஷயங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்று கூறி ஓட்டு சேகரித்து வருகின்றனர் .தொகுதிகளின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்கின்றனர் .குறிப்பாக விவசைகளின் முக்கிய பிரச்சனையான விவசாய பொருட்களுக்கான உரியவிலை ,கள் இறக்க அனுமதி போன்றவற்றை மக்களின் முன்வைத்து தீர்கப்படுமென்று உரிதி அளிக்கின்றனர்.


நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் .அவர்களை வெற்றி பெற செய்வோம் .
நம் மண் செழிக்க ,நமது இனம் செழிக்க ,கொங்கு மண்டலம் வலம் கொழிக்க .

0 comments: