"நம்மால் மட்டுமே முடியும் "
அரசியல் கட்சிகள் அரண்டு கிடக்கின்றன கோவையில் நடந்த பிரமாண்ட பொதுகூட்டத்தை பார்த்து எப்படி இவர்களால் இப்படி மக்களை திரட்ட முடிகிறது என்று .ஆயிரம் ஆயிரம் தொண்டர்கள் அணியணியாக குறிப்பாக பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .ஊடக பலமுல்ல மற்ற கட்சிகாரர்கள் நமது எழுச்சியை கண்டு மிரண்டு கிடக்கின்றனர் .இப்பொழுது அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் பத்திரிக்கை ,தொலைக்காட்சி போன்ற ஊடகம் அவர்களின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர் .ஆனால் நமக்கு ஊடக பலம இல்லை .ஆனாலும் நம்மால் முடியும் என்ற தாரக மந்திரம் லட்சகணக்கான மக்கள் கொங்குநாடு முன்னேற்ற பேரவை நோக்கி வரவைத்தது .ஒற்றுமைக்கான சக்தி இது .நாம் முன்னேற நமது கொங்குமண்டலம் முன்னேற நம்மால் முடியும் என்ற தாரக மந்திரமே போதும் மக்களை ஒன்று திரட்ட .கருமத்தம்பட்டியில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டை அனைத்து தொலைக்காட்சி மீடியாக்களும் இருட்டடிப்பு செய்தன .ஆனாலும் நமது எழுச்சியை கண்டு தமிழகமே நம்மை திரும்பி பார்த்தது .அப்பொழுது நாம் அரசியலில் காலடி எடுதுவைத்தோம்.ஆனால் இன்று நமது சக்தியை வாக்குகளாக வெளிப்படுத்தும் நேரம் .விவசாயத்திற்கு பெயர் போன
கொங்கு நாட்டை விவசாய்களின் தலையாய பிரச்சனை குறித்து இத்தனை நாள் ஆண்ட கட்சிகள் கண்டுகொள்ளவில்லை .நமது வருகையை அடுத்து நாங்கள் வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று தோல்வி பயத்தில் பிதற்றுகின்றனர் .அதற்கு ஓர் உதாரணம் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறிவந்த இப்பொழுது தமிழகத்தை ஆண்டு வரும் கட்சி .நமது எழுச்சியை கண்டு கள் இறக்கு வதற்கான அனுமதி பற்றி பரிசீலிக்க படும் என்று கூறியுள்ளார் .அவர் இப்படி அறிவித்தது எதற்காக மக்களுக்கு நன்மை செய்வதற்கா இல்லை ஒட்டு வாங்குவதற்கே ,நமது விவசாய்கள் எத்தனை முறை போராட்டம் நடத்தி இருப்பார்கள் கள் இறக்க அனுமதி பெற ,அப்பொழுது கொடுத்தார்களா அனுமதி இல்லை ஆனால் இன்று நிலைமை தலைகீழ் நமது கொங்குநாடு பேரவையின் அறிக்கை அப்படியே அவர்களும் கூறுகிறார்கள் .இதுவே நமக்கு கிடைத்த வெற்றி தான் .நாம் இன்னும் உழைக்க வேண்டும் ,கொங்கு மண்ணை அனைவரும் திரும்பி பார்கவேண்டும் . இது வரை மற்ற கட்சிகள் நம்மை ஆண்டது போதும் நம்மை நாமே ஆள்வோம் .
அரசியல் நமக்கு புதிதல்ல
ஆனால் நாம் செய்யும் அரசியல் புதிது
நம் ஒற்றுமையை இந்த பாராளுமன்ற தேர்தலில் காண்பிப்போம் .அதற்கு ஊடக பலம இப்பொழுது தேவை அல்ல நம்மால் முடியும் என்ற தாரக மந்திரமே போதும்
நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நம் இனத்தை காக்கும் .
" கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் "
4 comments:
sure nammal mattume mudiyum
The font is too big.. it can be reduced..
Bala......
Try to start one media(TV Channel) to our party...
kongu is the best for world
Post a Comment