கொங்கு பேரவை இணையத்தளம்

Thursday

கொங்குநாடு பேரவையை கண்டு அதிரும் திராவிட கட்சிகள்

பொள்ளாச்சி நாடளுமன்ற தொகுதி மடத்துக்குளம் ,வால்பாறை ,பொள்ளாச்சி ,கிணத்துகடவு ,தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது .மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல் உள்ளது .கொங்கு வேளாளர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதி விவசாயமே பிரதான தொழில் .ஏற்கனவே அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட திராவிட கட்சிகள் முதலில் நமது கொங்குநாடு பேரவையின் வரவால் நடுநடுங்கி போயருகின்றன .

'நம்மால் முடியும்" என்ற தாரக மந்திரத்துடன் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பெஸ்ட் ராமசாமி சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார் .அவருக்கு தொகுதியில் பெரும் அதரவு திரண்டு வருகிறது இதற்க்கு ஒரே ஒரு உதாரணம் கடந்த வாரம் வேட்புமனு தார்கள் செய்ய சென்றபொழுது திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் அறை லட்சத்துக்கும் மேல் ,விவசாய்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வரும் நமது வேட்பாளர் பிற கட்சினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் பொள்ளாச்சி தொகுதியில் .

பெரும்பாலான கவுண்டர் இல்லங்களில் கொங்குநாடு முன்னேற்ற பேரவையின் கொடிகளே பறக்கின்றன.

மேலும் நமது வேட்பாளருக்கு வரும் ஓட்டை பிரிக்க அண்ணா .தி .மு .க பூஸ்ட் ராமசாமி என்ற நபரை சுயேச்சை வேட்பாளர்களாக போட்டி இட வைக்கிறது .

ஆகவே இந்த தகவலை படிக்கும் கொங்கு நண்பர்களே ஆதிமூகவின் இந்த குள்ளனரிதனத்தை மக்களிடம் விளக்கி நமது வேட்பாளர்களை வெற்றி அடைய வழிவகுங்கள் .

"வெற்றி நமதே "

அன்பு கொங்கு சொந்தங்களே இந்தபதிவு தளத்தை பற்றியும் அதன் தகவல்களை பற்றியும் இணையம் உலவும் நமது மற்ற கொங்கு நண்பர்களுக்கு கூறுங்கள்.

0 comments: