கொங்கு பேரவை இணையத்தளம்

Thursday

கொங்குநாடு பேரவையை கண்டு அதிரும் திராவிட கட்சிகள்

பொள்ளாச்சி நாடளுமன்ற தொகுதி மடத்துக்குளம் ,வால்பாறை ,பொள்ளாச்சி ,கிணத்துகடவு ,தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது .மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல் உள்ளது .கொங்கு வேளாளர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதி விவசாயமே பிரதான தொழில் .ஏற்கனவே அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட திராவிட கட்சிகள் முதலில் நமது கொங்குநாடு பேரவையின் வரவால் நடுநடுங்கி போயருகின்றன .

'நம்மால் முடியும்" என்ற தாரக மந்திரத்துடன் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பெஸ்ட் ராமசாமி சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார் .அவருக்கு தொகுதியில் பெரும் அதரவு திரண்டு வருகிறது இதற்க்கு ஒரே ஒரு உதாரணம் கடந்த வாரம் வேட்புமனு தார்கள் செய்ய சென்றபொழுது திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் அறை லட்சத்துக்கும் மேல் ,விவசாய்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வரும் நமது வேட்பாளர் பிற கட்சினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் பொள்ளாச்சி தொகுதியில் .

பெரும்பாலான கவுண்டர் இல்லங்களில் கொங்குநாடு முன்னேற்ற பேரவையின் கொடிகளே பறக்கின்றன.

மேலும் நமது வேட்பாளருக்கு வரும் ஓட்டை பிரிக்க அண்ணா .தி .மு .க பூஸ்ட் ராமசாமி என்ற நபரை சுயேச்சை வேட்பாளர்களாக போட்டி இட வைக்கிறது .

ஆகவே இந்த தகவலை படிக்கும் கொங்கு நண்பர்களே ஆதிமூகவின் இந்த குள்ளனரிதனத்தை மக்களிடம் விளக்கி நமது வேட்பாளர்களை வெற்றி அடைய வழிவகுங்கள் .

"வெற்றி நமதே "

அன்பு கொங்கு சொந்தங்களே இந்தபதிவு தளத்தை பற்றியும் அதன் தகவல்களை பற்றியும் இணையம் உலவும் நமது மற்ற கொங்கு நண்பர்களுக்கு கூறுங்கள்.

Wednesday

வெற்றியை நோக்கி கொங்குநாடு பேரவை

கொங்குநாடு முன்னேற்ற பேரவை பிரம்மாண்டமான அளவில் அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்தி கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் களத்தில் குதித்துள்ளது . தற்பொழுது நாடளுமன்ற தேர்தலுக்கு கொங்கு மண்டலத்தில் வேட்பாளர்களை களம் இறக்கி முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது .கொங்குநாடு கட்சியின் தீவிர பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் கோவை ,பொள்ளாச்சி ,திருப்பூர் ,நாமக்கல் ,ஈரோடு போன்ற தொகுதிகளில் பிற கட்சியினர் பீதி அடைந்து வருகின்றனர் .

கொங்குநாடு வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றிய அறிமுக கூடங்களில் கிடைக்க பெற்ற தகவல் .

திரு . .ஆர்.ஈஸ்வரன் கோவை தொகுதி வேட்பாளர் கூறியதாவது :

தமிழக அரசுக்கு வருமான வரியாக வரும் பணம் நாப்பத்திரண்டு சதவிகிதம் கொங்கு மண்டலத்தில் இருந்து வருகிறது .ஆனால் அடிப்படை வளர்ச்சியில் பெரும்பாலான பகுதிகள் பின் தங்கியுள்ளது .அதை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் .மேலும் கோவை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு ,சாலைகள் ,திருப்பூர் ,பொள்ளாச்சி ,கோவை ,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில் திட்டம் .விவசாய பொருட்களுக்கு அதிகபச்ச விலை நிர்ணையம் ,மாசுபட்டுள்ள நொய்யல் நதியை மாசிலிருந்து விடுபட சாயகழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் .

திரு கே .பாலசுப்பிரமணியம் திருப்பூர் தொகுதி வேட்பாளர் கூறியதாவது :

(குன்னத்தூரில் நடந்த அறிமுக கூட்டத்தில் பல தினங்களுக்கு முன் ) கொங்கு மண்டலம் முன்னேற நான் பாடுபடுவேன் .அதே போல் டிராக்டர் ,போர்வெல் தொழிலுக்கு பெயர் போன குன்னத்தூரில் இளைஞர் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் டிராக்டர் ,கம்ப்ரசர் ,போர்வெல் போன்றவற்றுக்கு இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பேன் என்று கூறியுள்ளார் .மேலும் பல்லாண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அவினாசி அத்தி கடவு வாய்கால் திட்டத்தை செயல் படுத்த பாடுபடுவேன் என்று கூறினார் .திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து பல லட்ச கணக்கான விவசாய்கள் பயனடையும் இந்த அருமையான திட்டத்தை கிடப்பில் போட்டதற்கு நாம் தகுந்த பாடம் புகுத்த வேண்டும் என்று கூறினார் . மேலும் ஒருலிட்டார் தண்ணீ பதினைந்து ரூபாய்க்கு அதே அளவுதான் ஒரு லிட்டர் பாலுக்கும் கொள்முதல் விலை இப்பொழுது .தான் வெற்றி பெற்றால் பாலின் கொள்முதல் விலை பத்து ருபாய் அதிகரிக்கப்படும் இதன் மூலம் விவசாய பெருமக்கள் பெரும் பயன் அடைவார்கள் என்று கூறினார் .

அதே போல் கொங்கு மண்டலத்தில் பெரும் பிரச்சனையை இருக்கும் சாய கழிவுநீரை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் .திருப்பூரின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவேன் .போக்கு வரத்து சிக்கல்களை நீக்க நடவடிக்கை ,விசைத்தறி மேம்பாடு கட்டுபடியான நூல் விலை பெற ஆவன செய்வேன் என்று கூறினார்


திரு .பெஸ்ட் .எஸ் .ராமசாமி பொள்ளாச்சி தொகுதி வேபாளர் கூறியதாவது :

விவசாய பகுதி பெரும்பான்மையாக இருக்கும் பொள்ளாச்சி தொகுதியில் தென்னை மர விவசாய்கள் பெரிதும் பயன் படும் வகையில் கள் இறக்க அனுமதி பெற ஆவன செய்வேன் . வேளாண் பொருட்களுக்கு குளிர்பதன கிடங்குகள் அமைக்க ஆவன செய்வேன் ,ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களை நிறைவேற்றி பாசன வசதிகளை பெருக்குவேன் வால்பாறை பகுதயில் ரோப் கார் திட்டம் ,விவசாயத்திற்கு தடை இல்லா மின்சாரம் போன்ற வற்றை நிறைவேற்றுவேன் .அடிப்படைகிராமபுரங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிரவுதல் போன்ற திட்டங்களை செயல் படுத்துவேன் என்று கூறினார் .

கொங்குநாடு வேட்பாளர்களின் பேச்சுகள் ,உரைகள் ,புகை படங்கள் போன்றவற்றை கொங்கு நண்பர்களிடம் இருந்தால் முகவரி மற்றும் உங்கள் புகை படம் ஆகியவற்றை சேர்த்து அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன் .

தகவல்களை அனுப்ப kongumedia@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

Tuesday

கொங்குநாடு முன்னேற்ற பேரவை வேட்பாளர்கள்

கொங்கு மண்டலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சியான கொங்குநாடு முன்னேற்ற பேரவை இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு தனது வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது .கொங்கு இன மக்கள் அதிகம் வசிக்கும் பன்னிரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல் கீழே வருமாறு :(தவிர்க்க முடியாத காரணத்தால் சில வேட்பாளர்களின் பிறந்த ஊர் மற்றும் புகை படம் வெளியிட முடியவில்லை)


திரு .பெஸ்ட் எஸ் .ராமசாமி கவுண்டர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார் .(கொங்குநாடு முன்னேற்ற பேரவை தலைவர்)

கல்வி தகுதி :பட்ட படிப்பு படித்துள்ளார்

பிறந்த ஊர் :வேலாயுதம் பாளையம்

வேலை; தொழில் அதிபர்



திரு . .ஆர்.ஈஸ்வரன் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்( கொ.மு. பே மாநில செயலாளர் )

கல்வி தகுதி :பொறியியல் (மெக்கானிகல் )

பிறந்த ஊர் : கொக்கராயன் பேட்டை கிராமம்

வேலை : கட்டுமானம் , ஏற்றுமதி ஆடை தயாரிப்பு


திரு கே .பாலசுப்பிரமணியன் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் (கொ.மு. பே மாநில பொருளாளர் )

கல்வி தகுதி: பொறியியல்

பிறந்த ஊர் : பனபாளையம் கோவை மாவட்டம்

வேலை : பொறியாளர் மற்றும் விவசாய தொழில்


திரு சி.பாலசுப்பிரமணியம் ஈரோடு தொகுதியில் (கொ.மு. பே ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் )

கல்வி தகுதி : பொறியியல் பட்ட படிப்பு

பிறந்த ஊர் ; சென்னிமலை ரோடு பெருந்துறை .

வேலை :கொங்கு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்.போக்குவரத்து உரிமையாளர்


திரு.ஆர் .தேவராசன் நாமக்கல் தொகுதியில்


வேலை: கட்டுமானம் ,போக்குவரத்து உரிமையாளர்.

திரு . அசோக் சாம்ராஜ் சேலம் தொகுதியில் போட்டியிடுகிறார்

கல்வி
தகுதி : எஸ் .எஸ் .எல்.சி

வேலை :தொழில் மற்றும் சினிமா தயாரிப்பாளர் .


திரு கே .எம் .செல்லமுத்து திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்

கல்வி தகுதி :பிளஸ் டூ

வேலை;கட்டுமான தொழில் மற்றும் விவசாயம் .


திரு ஆர் .நடராஜன் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்

கல்வி தகுதி: பி .எஸ் சி .,பி .டெக்

வேலை : பஸ் பாடி பில்டர்


திரு .ஜி.அசோகன் தருமபுரி தொகுதியில் களம் இறங்குகிறார்

கல்வி தகுதி ;பிளஸ் டூ

வேலை : விவசாயம் மற்றும் போக்குவரத்து உரிமையாளர்


திரு எஸ் .ரமேஷ் கள்ளகுறிச்சி தொகுதியில்
போட்டியிடுகிறார்

கல்வி தகுதி: பொறியியல் (முடிக்கவில்லை )

வேலை : பஸ் சர்வீஸ் மற்றும் லாரி உரிமையாளர்


திரு .எம் .செல்வராஜன் கிருஷ்ணகிரி தொகுதியில் களம் காண்கிறார்

கல்வி தகுதி :எஸ்.எஸ்.எல்.சி

வேலை: விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் .


வேட்பாளர்களின் தகவல் புகைப்படமாக..கீழே