(இது என் சொந்த கருத்து மட்டுமே )
நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் நமது கொங்குநாடு பேரவை கட்சி துவக்கி மூன்று மாதங்கள் முற்று பெறாத நிலையில்( 5,80,000)வாக்குகளை பெற்று இருக்கிறது .எந்த கட்சியும் இது போல சாதனையை செய்தது இல்லை .இருதும் நாம் வெற்றி கனியை சுவைக்க முடியவில்லை .ஏன் என்ற காரணத்தை ஆராயும் பொழுது தகவல் தொடர்பு இடைவேளை ஒரு காரணம் என்று சொல்லலாம் .மக்களிடம் நமது அறிவிப்புகள் ,கட்சியின் செயல்பாடுகள்,தேர்தல் அறிகைகள் முழுமையாக சென்று அடைய முடிய வில்லை .இதனால் நமக்கு விழா வேண்டிய ஒட்டு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்பது என் கருத்து .ஏன் என்றால் திராவிட கட்சிகள் தங்களுக்கு என்று ஓர் ஊடக தளத்தை அதாவது தொலைக்காட்சி சானல்கள் வைத்துள்ளன அவை தங்களின் கட்சி சமந்த பட்ட நிகழ்வுகளை உடனுக்குடனே தன் ஊடகங்கள் மூலம் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டே இருகின்றன .ஆனால் நமக்கோ அப்படி அல்ல நமது கொங்குநாடு முன்னேற்ற பேரவையின் செய்திகள் அதிகம் முக்கிடும் தரப்படுவதில்லை ,அல்லது இருட்டடிப்பு செய்கின்றனர் .இந்த நிலை மாற வேண்டும் நமது கட்சியின் ஒவ்வொரு செயல் பாடுகளும் தொடர்ந்து நாம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் .
அதற்கு நமகென்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டும் ,அப்ப தான்
நம்முடைய செயல்பாடுகள் மக்களிடையே சென்று சேரும் .
அதுவும் மற்ற தொலைக்காட்சிகள் போல் அல்லாமல் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சி போன்று நல்ல தரமான பயனுள்ள ,நிகழ்ச்சிகளை தரவேண்டும் .சினிமா இல்லாது பலதரப்பட்ட நிகச்சிகள் அதாவது,பண்பாடு ,கலை ,விவசாயம் ,தொழில் வளர்ச்சி ,நமது கொங்கு நாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் குருஞ்சித்திரம் ,அதே போல இன்றைய இளையதலை முறையநிர்க்கு நமது கொங்குநாட்டு காவலன் வீரன் தீரன் சின்னமலை பற்றிய விவரங்கள் பெரும்பன்மயனவர்களுக்கு தெரிவில்லை ,அதனால் கொங்கு நாட்டில் ஆங்கிலேயனுக்கு எதிராக போர் புரிந்து விடுதலை வேள்விக்கு வித்திட்ட வீரன் தீரன் சின்னமலையின் வாழ்கை தொடர் போன்ற நிகசிகளை தரலாம்,மேலும் கொங்கு நாட்டில் திருவிழா சமயத்தில் ஆடப்படும் சலங்கை ஆட்டம் ,பாட்டு படித்தல் போன்ற வற்றை வெள்ளி உலகத்திற்கு எடுத்து கூறும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைக்கலாம் ,அதே போல ஆங்கில மோகம் கொண்டு தெரியும் இளம் சமூகத்திற்கு தமிழின் சிறப்புகளை அதிலும் நமது கொஞ்சி பேசும் கொங்கு தமிழை பற்றிய தகவல்களை போதிக்கலாம் .
அதே போல சினிமா சாராத நிகழ்ச்சிகளை முடிந்த அளவிற்கு நமது மக்கள் உபயோகப்படும் அளவிற்கு செய்யலாம் .மேலும் நமது கட்சி மாநாடுகளை நேரலை ஒலிபரப்பு மூலம் பிரமாண்டமாக உலகிற்கு கொண்டு செல்லலாம் .
தொலைக்காட்சி மூலம் நமது கட்சியும் ,கட்சி சார்ந்த நிகழ்வுகளும் உடனுக்குடனே சென்றடையும் ,தரமான நிகச்சிகள் மூலம் அவர்கள் வாழ்கை தரம் மேன்மை அடையும் .